திங்கள், 26 ஜனவரி, 2009

அனுபவம்

பிறப்பினில் வருவது யாதேனக்கேட்டேன்
- பிறந்துபார்
என இறைவன் பணித்தான்;
இறப்பினில் வருவது யாதேனக்கேட்டேன் -இறந்துபார்
என இறைவன் பணித்தான்;
மனையாள் சுகம் என்பது யாதேனக்கேட்டேன் -மணந்து பார்
என இறைவன் பணித்தான்;
அனைத்தும் அனுபவித்தரிவதே என்றால் -ஆண்டவனே
நீ எதற்கு என்றேன் ;
ஆண்டவன் சற்றே அருகில் வந்து அந்த அனுபவம்
என்பதே நன்தானப்பா என்றார்.

நமது வாழ்க்கை என்பதே அனுபவங்களின் தொகுப்பு தானே.
லைப் இஸ் நத்திங் பட் எக்ஸ்பீரியன்ஸ் என்ற படி வாழ்க்கை என்பது எதுவுமில்லை ,நாம் பெறுகின்ற அனுபவங்களித்தவிர.
இது ஒரு வெறுமை வாதமாக தோன்றினாலும் நிதர்சனம் என்பது எனது எனது கருத்து. நிகழ காலத்தில் வாழ்தல் , இறந்த காலத்தில் நடந்தவைகளை பற்றிய கவலை இன்றி எதிர் காலத்தை பற்றிய எதிர் பார்ப்புகள் இன்றி நிகழ காலத்தில் வாழ்தல் என்பது நமது வாழ்வை விழிப்புணர்வு உள்ளதாக்கும்.
இறந்த கால கவலைகளும் , எதிர்கால பயங்களும் நமது நிகழ்கால வாழ்வை அர்த்தமற்றதாக்குகின்றன. நிகழ்காலத்தில் வாழும்பொழுது நமது இருப்பு, சூழல், பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக