திங்கள், 26 ஜனவரி, 2009

நமது இலக்கியங்களும் , புதினங்களும் காதல் என்ற உணர்விற்கு அளித்த முக்கியத்துவத்தை நட்புக்கு அளித்ததாக தெரியவில்லை. நமது பால்யம் என்பது நினைவில் கொள்வதே நண்பர்களையும்,அவர்களை ஒட்டிய சம்பவங்களை நினைவு கொள்ளுதலே.
பால்யத்தின் பெரும் பொழுதுகள் நன்பர்களுடனே கழிகின்றன. வீட்டுக்கு புறத்திலுள்ள உலகம் என்பது நண்பர்கள் உதவியுடனே நமக்கு அறிமுகமாகிறது. முன் தொடர்பு ஏதுமில்லாத உறவு நட்பு ஒன்று தான். நட்பு என்பதன் முக்கியத்துவம் ஏனோ சரியாக வலியுருத்தபடாமலே உள்ளது.
காதல் என்பதை ஆண் பெண் நட்பாக பார்ப்பதே சரியானது. எனது பால்யத்தின் நினைவுகள் யாவும் எனாது நண்பர்களுக்குல்லானதான நினைவுகளாகவே நினைவில் உள்ளன. இருத்தல் என்பதே சக மனிதர்களுடன் உறவு கொண்டிருத்தல் என்ற ஒரு உளவியல் அறிகரின் கூற்றுபடி பால்யத்தின் நினைவுகள் அனைத்தும் நமது நண்பர்களை ,அவர்களை ஒட்டிய சம்பவங்களை நினைவுறுத்தும் நினைவளைகலாகவே உள்ளது.
இளமைகாலம் வரை நண்பர்கள் மாறினாலும் நட்பு என்பதன் தேவை முக்கியத்துவம் இழக்காது இருந்தாலும் திருமணம் ,குடும்பம் என்றான பின் நட்பு வட்டாரம் சுருங்கி விடுதல் இயல்பாக உள்ளது.
ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் தனது நெருங்கிய நண்பனொருவனின் நினைவுகள் அழியாத சித்திரமாய் இருந்து கொண்டேஇருக்கும்
முகநக நட்பது நட்பன்று -நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக