புதன், 1 டிசம்பர், 2010

சுய புலம்பல்

வாழ்க்கை என்ன ஒரு விசித்திரமான அனுபவம். பிறப்பும் அதனை ஒட்டிய சிறு வயது அனுபவங்களும் ,குடும்ப உறவுகளும் பரந்த இந்த வெளி உலகமும் ,வளர்ந்த விதமும் , அந்தந்த வயதின் தேடுதல்களும் விரைந்து செல்லும் புகைவண்டியின் பயணத்தில் கடந்து செல்லும் காட்சிகளாக மறைந்து விடும் அதிசயமும் வியப்பாகத்தான் உள்ளது.
வாழ்க்கை ஒரு ஓட்ட பந்தயம் என்று நினைத்து பாதி தூரம் கடந்த பின்பு இங்கு பந்தயம் என்பதே இல்லை என்பது தெளிவாகிறது. எதை நோக்கி இத்தனை விரைவாக பயணித்தோம் என்ற குழப்ப நிலை மட்டுமே மிஞ்சுகிறது. கடந்து வந்த பாதையின் பாலைகளும் சோலைகளும் கனவில் கண்ட பிம்பங்களாக மட்டுமே நினைவில் நிற்கின்றன .
வாழ்க்கை என்ற மிக சுவாரஸ்யமான புத்தகத்தின் பக்கங்களை படிக்காமல் புரட்டி பார்த்த அவசரம் வெறுப்பாகத்தான் உள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக